தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 51கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம்  51கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியமன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் வைகோ ஆகியோர் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று கலிங்கப்பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.ஆகாஷ், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலை குமார், மா.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைசிறப்பித்தனர்.