தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியும், நெல்லை கேன்ஸ் கேர் சென்டர், உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம், மற்றும் எக் விடாஸ் நிறுவனம் இணைந்து நடத்தும்  மாபெரும் மருத்துவ முகாமிற்கு கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன்ஹபீபூர் ரஹ்மான் தலைமையில், நகர செயலாளர் எஸ். அப்பாஸ் முன்னிலையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் நோயின் தன்மைகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும், 26 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இப்பரிசோதனை மிக அவசியம், ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் பெண்களில் 25 பேருக்கு கர்ப்பப்பை வாய் சம்பந்தப்பட்ட நோய்கள் புதிதாக கண்டறியப்படுகிறது, கர்ப்பப்பை ஆய்வு மற்றும் பாப்ஸ்மியர் சோதனை செய்து கொள்வதினால் இந்த நிலையை மாற்றவும் தடுக்கவும் முடியும், கர்ப்பப்பை வாய் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம், ஒரு லட்சம் பெண்களில் 30 பேருக்கு மார்பகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கண்டறியப்படுகிறது, சுய மார்பக பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையில் ஏற்படும் மார்பகம் சம்பந்தமான பிரச்சினைகளை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது, புகையிலை பயன்படுத்துவதனால் வாய் பகுதியில் அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது, இந்த நிலையை மாற்றவும் நோயை தடுக்கவும் முடியும், வாய் பகுதியில் வரக்கூடிய பிரச்சினைகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் முற்றிலுமாக குணமாகும் வாய்ப்பு விகிதம் அதிகம் உள்ளது.

 புகையிலை பழக்கத்தை தவிர்ப்பதன் மூலம் வாயில் வரக்கூடிய பிரச்சினைகள் முற்றிலுமாக தவிர்க்க முடியும் என நோய்களின் தன்மைகள் குறித்து நெல்லை கேன்சர் கேர் சென்டர் மருத்துவர் சிந்தியா சரோஜா மருத்துவ அலுவலர் விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி உறுப்பினர்கள் 10- வது வார்டு முருகன், 11-வது வார்டு முகைதீன் கனி, எஸ் டி பி ஐ யாசர் கான், அக்பர் அலி, நெசவாளர் அணி மூவண்ணா மசூது, சாகிர் உசேன் தகவல் தொழில் நுட்ப அணி, மஜீத், மணிகண்டன், மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.