தென்காசியில்  புன்னையாபுரம், சிங்கிலிபட்டி  கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

தென்காசி மாவட்டம்  புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தைப்பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000/ரொக்கம் ஆகிய பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வினை புன்னையாபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி ஆ. மணிகண்டன் தலைமையில் ஊராட்சி மன்றத்தலைவர் திலகவதி கண்ணன், துணைத் தலைவர் திருமலை வேலு, முன்னிலையில் புன்னையாபுரம், சிங்கிலிபட்டி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கிளைக் கழகச் செயலாளர் முத்துராஜ், கற்பக சிவா, திருப்பதி, பேச்சிமுத்து, முத்துப்பாண்டி, மூக்காண்டி, சிங்காரவேலன், பழனி, மாடசாமி, திருவு, பரமசிவன், முருகன், குமார், பிச்சைக்கனி, மாரிச் செல்வம், மதன், ராமச்சந்திரன், கண்ணன், கிளைக் கழகச் செயலாளர் சமுத்திரக்கனி, பிரதிநிதி முருகேசன், சாமியா, தொமுச மருதையா பாண்டியன், பாலசுப்ரமணியன், சுரேஷ், முத்துப்பாண்டி, ராமகிருஷ்ணன், முத்துக்குமார், நாகராஜ், சஞ்சய், மாரிமுத்து, லட்சுமணன், மற்றும் இளைஞர் அணி முத்து செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.