ஆலங்குளத்தில் 38 ஆண்டுகள் பாரம்பரிய ஜவுளி நிறுவனமான செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் தனது புதிய கிளையை இன்று தென்காசி நகரில் மிக பிரம்மாண்டமாக 3 தளங்களுடன் திறக்கப்பட்டுள்ளது. தென்காசி புதிய கிளையை செல்வராணி நிறுவனர் எஸ். டி. செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், சகோதரர் கார்தி கமாலியேல் ஆசிர்வாதஜெபம் செய்தார், கடையில் முதல் விற்பனையை சுரண்டை பொன் வேலன் பட்டு மஹால் உரிமையாளர் ஜே.பொன்ராஜ் பெற்று கொண்டார், இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜேம்ஸ் முத்துப்பாண்டியன், ஜெபத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கடையில் கீழ் தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகளும், தரைதளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவும், முதல் தளத்தில் பட்டு சேலைகளும், இரண்டாம் தளத்தில் ஆண்களுக்கான ஆடை வகைகளும் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல சலுகைகளை நேற்று முதல் வழங்கி வருகின்றனர். நேற்று மாலையில் வாடிக்கையாளர்களை கெளரவப்படுத்தும் விதமாக 8 அடி உயரத்தில் 250 கிலோ ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான கேக் வாடிக்கையாளர்களை கொண்டு கட் செய்யப்பட்டது, வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கான பணியினை நெல்லை வாணி பேக்கர்ஸ் சுந்தர் மற்றும் வாணிசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர், திறப்பு விழா ஏற்பாட்டினை செல்வராணி ஜவுளி நிறுவன உரிமையாளர் எஸ். பிரின்ஸ்தங்கம் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர், திறப்பு விழா நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஜவுளிகளை எடுத்துச் சென்றனர், திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் செல்வராணி ஜவுளி நிறுவன உரிமையாளர் எஸ். பிரின்ஸ் தங்கம் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.