ஆலங்குளத்தில் 38 ஆண்டுகள் பாரம்பரிய ஜவுளி நிறுவனமான செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் தனது புதிய கிளையை நாளை வெள்ளிக்கிழமை தென்காசி நகரில் மிக பிரம்மாண்டமாக 3 தளங்களுடன் திறக்கப்படவுள்ளது.
தென்காசி புதிய கிளையை செல்வராணி நிறுவனர் எஸ்.டி.செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். சகோதரர் கார்தி கமாலியேல் ஆசிர்வாதஜெபம் செய்கிறார். கடையில் முதல் விற்பனையை சுரண்டை பொன் வேலன் பட்டு மஹால் உரிமையாளர் ஜே.பொன்ராஜ் பெற்று கொள்கிறார். புதிய கடையில் கீழ் தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகளும், தரைதளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவும், முதல் தளத்தில் பட்டு சேலைகளும், இரண்டாம் தளத்தில் ஆண்களுக்கான ஆடை வகைகளும் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல சலுகைகளை வழங்குகின்றனர்.
நாளை மாலையில் வாடிக்கையாளர்களை கெளரவபடுத்தும் விதமாக 8 அடி உயரத்தில் 250 கிலோ கேக் வாடிக்கையாளர்களை கொண்டு கட் செய்யப்படுகிறது. இதற்காக வாணி பேக்கர்ஸ் சுந்தர் மற்றும் வாணி சுந்தர் 10 நாட்களாக கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். திறப்பு விழா ஏற்பாடுகளை செல்வராணி ஜவுளி நிறுவன உரிமையாளர் எஸ். பிரின்ஸ் தங்கம் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.