திருவரங்குளம் மேட்டுப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்கட்டளை ஊராட்சி மேட்டுப்பட்டி வடக்கு காலனியில் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மேட்டுப்பட்டி ஆதி ஜல்லிக்கட்டு பேரவை திருக்காட்டுகளை ஊராட்சி பொதுமக்கள் திமுக கிளை கழகம் சார்பில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு வடமாடு நிகழ்ச்சி ஆசிரியர் ஞானபிரகாசம் தலைமையில் ராஜ்மோகன் முன்னிலையில் நடைபெற்றது.

வடமாடு போட்டியில் திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 12 மாடுகள் கலந்து கொண்டன, மூன்று மாடுகள் போட்டியில் வீரர்களால் பிடிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வீரர்களுக்கும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர்,  திமுக நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பட்டி ஆதி ஜல்லிக்கட்டு பேரவை திருக்கட்டளை ஊராட்சி திமுக கிளைக்கழகங்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.