திருமயம் வட்டாரத்தில் உள்ள தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா- மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமம் குழிப்பிறையில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு தலைமையேற்று பேசிய திருமயம் வேளாண்மை உதவி இயக்குநர் உமா, வேளாண்மை மற்றும் உழவர்நலத்றையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனதிட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், தரிசுநில மேம்பாட்டு திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் விவசாயிகள் அனைத்து பங்குபெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டர்.

பயிற்சி அளித்து ரவிசந்திரன் (ம.தி) பேசுகையில், தமிழகத்தில் முன்னோடி திட்டமாக தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நிகர சாகுபடி பரப்பு உயர்த்துவதில் தரிசுநில மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தரிசு நிலங்களில் அதிக தண்ணீர் பயன்பாடாத பயிர்களான கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களும் பயறு வகை பயிர்களான உளுந்து, பாசி பயறு, தட்டை பயறு போன்ற பயறு வகை பயிர்களை பயிர் செய்து பயன் பெறலாம்.

கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களில் மருத்துவ பயன் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். முன்னதாக தரிசுநில மேம்பாடு தொகுப்பை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பேசிய வேளாண்மை அலுவலர் பிரவீனா,  உழவன் செயலி பயன்பாடு பற்றியும், பதிவேற்றம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் சுப்ரமணியன், தரிசு நில சாகுபடி பற்றியும் பயிர்களின் ரகங்கள் பற்றி தெளிவாக எடுத்துக்கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமயம் உதவி வேளாண் அலுவலர் அருண்மொழி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை மற்றும்  உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பிரபுராஜ், அருளரசு செய்திருந்தனர்.