திருமயம் பகுதியில் நாளை மின்தடை நிறுத்தம்: மின்வாரியம் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளாதல் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது  என உதவி செயற்பொறியாளர் கா.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

திருமயம் மின்நிலையத்தில் நாளை புதன்கிழமை 14.9.2022 அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இராயவரம் மின்பாதை,  திருமயம், மணவாளன் கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரக்குடி, ஊனையூர், சவேரியார் புரம், கோனாபட்டு மின்பாதை, குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, தேத்தாம்பட்டி, ராங்கியம் மின்பாதை, வாரியபட்டி, கொள்ளகாட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், விராச்சிலை மின்பாதை, மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி லட்சுமிபுரம், ஏனபட்டி, பெல் நிறுவனம் மின் பாதை  ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.