
திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் ராம சுப்புராம் இல்ல திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமயம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான நெய்வாசல் ராம சுப்புராம் – சிவகாமசுந்தரி தம்பதியரின் மகன் திருமயம் ஒன்றிய குழு உறுப்பினர் கணேஷ் பிரபு மணமகள் மீனப்பிரகதி ஆகியோரது திருமணம் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருக்கோவிலில் வெகுமஸியாக நடைபெற்றது விழாவில் குன்றக்குடி குருமகா சன்னிதானம் பொன்னம்பல அடிகளார், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மணவீட்டார் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் திருமயம் வர்ஷினி பேலஸ் திருமண மஹாலில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்ய நாதன், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், முன்னாள் எம்பி நாச்சியப்பன், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள் மாங்குடி, ராமச்சந்திரன் முத்துராஜா, சின்னத்துரை, ராமசாமி, சுந்தரம், விஜயகுமார், ராஜசேகரன், அருணகிரி. மணமேல்குடி சேர்மன் கார்த்திகேயன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள். திமுக ஒன்றிய குழு தலைவர்கள், காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், உற்றார் மற்றும் உறவினர்கள், நெய்வாசல், வெங்களூர் கிராம பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர்.














