திருமயம் அருகே என்.எஸ்.எஸ்., முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குழி பிறை ராம ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு ஏழு நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம், திட்ட அலுவலர் பழனியப்பன் மேற்பார்வையில் குழிவரைப்பட்டியில் நடைபெற்றது.

இதில் அம்மன் கோவில் வளாகம் பள்ளி செல்லும் வழியில் முள் செடிகள் அகற்றல், முக்கிய தெருக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது. துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் சாலை ஓரங்கள், விநாயகர் கோவில் வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டது. நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி விளையாட்டு மைதானம் செப்பனிடப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளி செயலாளர் ராம மீனாட்சி சொக்கலிங்கம் தலைமையேற்று மாணவர்களுக்கு முகாம் சான்றிதழ் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கருப்பையா மற்றும் ஆசிரியர்கள் அழகு, சந்திரன், பாலகுமார், தேவேந்திரன், லட்சுமண ராஜார் காலை ராஜா ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.