திருமயத்தில் காங்கிரஸ் வட்டார, நகரத்  தலைவர்கள் அறிமுகக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வே.மு திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது,  கூட்டத்திற்கு மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.அக்பர்அலி தலைமை தாங்கினார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான  ராமசுப்புராம் எஸ்சி,எஸ்டி பிரிவு தெற்கு மாவட்டத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புதியதாக நியமனம் செய்யப்பட்ட வட்டார நகரத் தலைவர்களுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமசுப்புராம் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு வட்டாரத் தலைவர் ஆர். எம். மணிகண்டன், வடக்கு வட்டாரத் தலைவர் எஸ்.கார்த்திகேயன், நகரத் தலைவர் கே.ஆர்.அன்பு ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து அறிமுகம் செய்து வைத்தார் மற்றும் கூட்டத்திற்கு வட்டார நகர நிர்வாகிகள் செயல்வீரர்கள்  உற்சாகமாக கலந்து கொண்டனர், கூட்டத்தின்  முடிவில் தெற்கு வட்டாரத் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.