திருப்பூரில் பொங்கல் நிதியை அரசுப்பள்ளி கட்டிட பணிக்கு வழங்கிய இளைஞர் – பொதுமக்கள் பாராட்டு

உடுமலை வட்டம்மானுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வாலிபர் பூபதி, தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் நிதி ரூ.1000த்தை பள்ளி கட்டிட பணிக்கு நிதியாக வழங்கினார். திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம்மானுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக மானுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் 3 மூட்டை சிமெண்ட் மற்றும் எம்சாண்ட் வழங்கினார். மேலும் குருவப்பநாயக்கனூரை சேர்ந்த வாலிபர் பூபதி, தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் நிதி ரூ.1000த்தை பள்ளி கட்டிட பணிக்கு நிதியாக வழங்கினார், அவரது தாயார் பாக்கியத்திற்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாயையும் வழங்கினார்  அவர்களுக்கு பள்ளியின் மேலாண்மை குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.