திருநெல்வேலி மாவட்டம்   வள்ளியூரில் ஸ்ரீ சரா நிர்த்ய கலாபவன் கலை கூடம் வழங்கும் சலங்கை பூஜை மற்றும் தாள பூஜை

திருநெல்வேலி மாவட்டம்   வள்ளியூரில் ராயல்ராஜ் மஹாலில் ஸ்ரீ சரா நிர்த்ய கலாபவன் கலை கூடம் வழங்கும் சலங்கை பூஜை மற்றும் தாள பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மு. அப்பாவு எம்எல்ஏ, தமிழக சட்டப்பேரவைத் தலைவர், ராதா ராதாகிருஷ்ணன், வள்ளியூர் பேரூராட்சி மன்றத் தலைவர்,நீ. கண்ணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், வி. நம்பி மாவட்ட திமுக துணைச் செயலாளர், வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம் பேரூர் கழக திமுக செயலாளர், மௌனகுரு விஜயானந்த சரஸ்வதி சுவாமிகள், வீர சாஸ்தா திருக்கோவில் முத்துச்சாமிபுரம் பணகுடி, மு. சங்கர் முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர், நண்பர் ரத்ததான கழகச் செயலாளர் பணகுடி, டி.என். ராஜு குழுவினரின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரங்கேற்றம் நடத்திய மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், பாராட்டுகளையும், தெரிவித்துக்கொண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பெருமைப்படுகிறேன், பரதநாட்டிய கலை வளர, தமிழக அரசாலும் என்னாலும் இயன்ற உதவி செய்து நாட்டிய கலை வளர உறுதுணையாக இருப்பேன் என்று கூறி மாணவிகளையும், மாணவர்களையும், பெற்றோர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.