இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை திருநெல்வேலி தென்காசி மாவட்டங்கள் இணைந்து நடத்தும் ஆறாவது சித்த மருத்துவ திருநாள் இரண்டு நாட்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இரா.உஷா வரவேற்புரை ஆற்றினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் பா. ஆகாஷ் தலைமை ஏற்று நமது பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் சிறப்புரை ஆற்றினார், இவ்விழாவில் தென்காசி மாவட்ட நகர்மன்றத் தலைவர் சாதிர், துணை தலைவர் கே. எம் .சி. சுப்பையா, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் அன்றாடம் நாம் வீட்டில் பயன்படுத்தும் வீட்டுத் தோட்டம் மூலிகைகள், மருந்தாகும் மூலிகை தாவரங்கள், கீரை வகைகள், மூலிகை உலர் சரக்குகள் கண்காட்சியும் உணவே மருந்து மருந்தே உணவு தலைப்பில் சிறு தானியங்கள் பாரம்பரிய அரிசி வகைகள் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை உண்ணும் உணவு வகைகள்,குழந்தை நலம், மகளிர் நலம், தொற்றா நோய்கள் நலம், சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பான காயகற்பம் பற்றிய கண்காட்சி சித்த மருத்துவ புற மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றிய கண்காட்சிகள் ,அறிவியல் ஆய்வு கட்டுரைகள், சித்த மருத்துவ புத்தக கண்காட்சி,காட்சி படுத்தப்பட்டன.
இவ்விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் ,சிறு தானிய பாயாசம் வழங்கப்பட்டது, இவ்விழாவில் சித்த மருத்துவத்தின் யாக்கை இலக்கணம் மூலம் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இரண்டு நாட்கள் நடைபெற்ற மருத்துவ முகாமில் அனைவரும் பங்கு பெற்று பயன்பெற்றனர், இவ்விழாவினை திருநெல்வேலி தென்காசி மாவட்ட சித்த மருத்துவஅலுவலர்மருத்துவர் ஆர். உஷா, மருத்துவர்கள் வர்ம மருத்துவர் எ. ராஜேஸ்வரன்,கே. சதீஷ்குமார், பி. ஆரோக்கியராஜ், காஜாமைதீன்,மருந்தாளுநர்கள் உஷா, சுப்புலட்சுமி ,தனலட்சுமி, குற்றாலம், மாணிக்கம், நாகராஜ், மோகன்ராஜ், வெங்கடாசலம், மருத்துவமனை பணியாளர்கள் சக்திவேல், பாலசுப்பிரமணியன், அய்யம்மாள், மகேந்திரன், வேலுச்சாமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் வழிகாட்டுதலின்படி விழாஏற்பாடு செய்யப்பட்டது.