திருநாவலூர் அரசு பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை டிசம்பர் 26-ம் தேதி, பள்ளியின் தலைமை ஆசிரியை இளங்கோதை  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் வேல்முருகன்  முகாமில் கலந்து கொண்டு மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பள்ளி வளாகம், மாணவியர் விடுதி வளாகம் போன்றவற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர், தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் திருநாவலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர், மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு, கொரோனா, டெங்கு காய்ச்சல் குறித்து  பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு முகாம் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோவிந்தசாமி தலைமையில் ஒரு வாரமாக நடைபெற்ற முகாம்,இன்று  நிறைவு பெற்றது. இந்த முகாமில் திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பத்மநாபன் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகவள்ளி மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் கபாகாந்தி, தாமோதரன், பள்ளி ஆசிரியர்கள் ராஜசேகரன், சத்தியமூர்த்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.