திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளைமுதல் செப்டம்பர் 5-ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுகிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தரிகளின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆவணித் திருவிழா நிகழ்வுகளை வீட்டிலிருந்தே யூடியூப் வாயிலாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.