திமுக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

திமுகவில் இருந்து விலகுவதாக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன. நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த நிலையில், திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது எனது விருப்பம். 2009- ஆம் ஆண்டிற்கு பிறகு கட்சி பணிகளை மட்டுமே செய்து வந்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதம் அளித்துவிட்டதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.