திமுக எம்பி ஆ.ராசாவிற்கு புதுக்கோட்டையிலிருந்து வெண்டைக்காய், எலுமிச்சம்பழம் பார்சல்

திமுக துணை பொது செயலாளர் ஆ.ராஜாவை கண்டித்து அவருக்கு புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை சார்பில் வெண்டைக்காய் மற்றும் எலுமிச்சை பழங்கள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தது தற்போது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. பாஜக மற்றும் இந்து மத தலைவர்கள் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவரும் சூழலில் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீண்டும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார்.

இந்த நிலையில் அவரின் கருத்தையும் அவரின் செயல்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளாத மாற்று கருத்துடைய புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரசு பிரிவு சார்பில் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையத்திலிருந்து திமுக எம்பி ஆ.ராசாவிற்கு புத்தி பேதலித்து மூளை இல்லாமல் இருப்பதால் எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளிக்கவும் வெண்டைக்காய் சாப்பிட்டு மூளையை வளர்த்துக் கொள்ளட்டும் என்று கூறி ராஜா வசிக்கும் பெரம்பலூர், சென்னை மற்றும் டெல்லி வீடுகளுக்கு விரைவு தபாலில் வெண்டைக்காய், எலுமிச்சைபழங்களை இன்று அனுப்பி வைத்துள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிற்கு செவித்திறன் குறைபாடுடையோர் பயன்படுத்தக்கூடிய காது கேட்கும் கருவியை இதே அஞ்சல் துறை மூலமாக அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.