திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

தலைக்கவசம் அணியாமல் வந்த அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு.

திண்டுக்கல்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை சார்பில்  போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடைபெற்றது. 

நகர் போக்குவரத்து ஆய்வாளர் சேரலாதன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த 40 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.