திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே விபத்து வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் பலி

திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே நடந்த சாலை விபத்தில் வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் பாரதி மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு சாத்தூரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே அவர்களின்கார் வந்து கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி சாலை சென்டர் மீடியனில் மோதி கார் எதிர்ப்புறம் சாலையில் உருண்டோடியது.

இதில் ஜூனியர் வழக்கறிஞரான மோனிகா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் ஓட்டுநர் அசோக் குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பலியானார். மைக்கேல் பாரதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.