புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இசைக்கலைஞர் கே.செல்லையா திருவுருவப்படதிறப்பு விழா பி.விஆர் மகாலில் நடைபெற்றது. விழாவிற்கு திலகவதியார் திருவருள் ஆதினகர்த்தர் சந்திரசேகரசுவாமிகள் தலைமைதாங்கினர். வழுவூர்ரவி.தேவா, இசைவேளாளர்சங்கமாநிலதுணைத்தலைவர் ந.புண்ணியமூர்த்தி ஆகியோர்முன்னிலைவகித்தனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழகசட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இசைக்கலைஞர் கே.செல்லையா திருவுருவப்படத்தை திறந்துவைத்து புகழாரம் சூட்டினார். அவர்பேசுகையில் கே.செல்லையா தமிழகத்தின் பிரபலகலைஞர் டீ.என்.ராஜரெத்தினம்பிள்ளை,சண்முகசுந்தரம்,ஏ.கே.சி.நடராஜன்ஆகியோருக்கு தவில் வாசித்துள்ளார். அவர்3-ம்வகுப்பு வரைபடித்தறிந்தாலும் தவில்சக்கர வர்த்தியாக மிளிர்ந்தார் என்று பலர் இங்கு பேசினர். ஒருவருக்கு திறமை இருந்தால் எந்தத்துறையிலும் சிறந்து விளங்களாம் .படிப்பு என்பது ஒருபொருட்டே இல்லை. ஆர்வமும்,திறமையும் இருந்தால் மறைந்த முதுபெரும் கலைஞர் செல்லையா பிள்ளை போல் மிளிரலாம் என்றும்கூறினார்.

மேலும் பேசுகையில் முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய தொல்காப்பிய பூங்கவையும்,திருவிளையாடற் புராணத்தையும் மேற்கோள்காட்டி பேசினார் .புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, உணவக உரிமையாளர் சங்கத்தலைவர் சண்முக பழனியப்பன், டாக்டர் இராமமூர்த்தி, சத்தியராம் ஜுவல்லரி உரிமையாளர் சத்தியராம் இராமுக்கண்ணு, அரசு இசைப்பள்ளி ஆசிரியர் உத்திராபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கவிஞர்தங்கம்மூர்த்தி புகழுரை வழங்கினார். விழாவில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன்,மேனாள் நகர்மன்றத்துணைத்தலைவர் நைனாமுகமது, அரசு வழக்குரைஞர் செந்தில், நகரச்செயலாளர் அரு.வீரமணி, இரா.பாண்டியன்,செ.ரமேஷ், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் ரெங்கராஜ், தா.முரளி,மேனாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வகுமார் ஆகிய முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.முன்னதாகபொறியாளர் கண்ணன் வரவேற்புரையும், வழக்கறிஞர் மு.ராஜா நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சியை மகா.சுந்தர் தொகுத்துவழங்கினார்.