தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கறம்பக்குடி கிளை சார்பில் இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி  கிளை மற்றும்  அறந்தாங்கி அரசு மருத்துவமணை இணைந்து  இன்று கறம்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கறம்பக்குடி கிளை பொருப்பாளர்கள் இக்பால்,முகம்மது அலி ஆகியோர்  தலைமை வகித்தனர் இதில் கிளை உறுப்பிணர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைபாளராக வட்டார மருத்துவ அலுவலகர் பஜ்ருல் அஹமது கலந்து கொண்டார்.

இதில் இரத்தகொடையாளர்கள்  மற்றும் பொதுமக்கள் இரத்ததானம் முகாமில் கலந்து கொண்டனர்.இதில்  30 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது இரத்தம் வழங்கிய அனைவருக்கும் இரத்த வங்கி மருத்துவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.