தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 10 ஆயிரம் குறைவு

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 19,867 பேர் தேர்வை தமிழில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்விற்கு கடந்த மாதம் 13ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதில் நாடு முழுவதும் 16,14,714 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1,12,890 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு. மேலும் இவர்களில் தமிழில் தேர்வு எழுத 19,867 விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 202 நகரங்களில் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் நடைப்பெறவுள்ள இத்தேர்வுக்கான தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை பதிவிறக்கம்/சரிபார்ப்பதில் மாணவர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து ‘OMR விடைத்தாளை எவ்வாறு நிரப்புவது’ என்ற அறிவுறுத்தல்களுடன், 011-40759000 என்ற எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.