தனது மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற பெண் சிறையில் அடைப்பு

தனது மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.

காரைக்கால் நேரு நகரை சேர்ந்த பால மணிகண்டன் என்ற சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் மாணவன் சென்று இருக்கின்றான். மதியம் வீடு திரும்பிய சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் காவலாளி குளிர்பானம் கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி, மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார். உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவனை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர்.

காவலாளியிடம் விசாரிக்கையில்: சிறுவனிடம் குளிர்பானத்தை கொடுக்க சொல்லி பள்ளி காவலாளியிடம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர் குளிர்பானம் கொடுத்து சென்றது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது தனது மகளை விட சிறுவன் நன்றாக படித்ததால் சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இதனிடையே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவன் பால மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். உயிரிழந்த மாணவனின் உடல் உடற்கூறாய்விற்காக பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் மாணவியின் தாயார் சகாய ராணி விக்டோரியா மீது திட்டமிட்டு கொலை செய்தல் வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினார் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 38 = 44