தந்தை பெரியார் உருவ சிலைக்கு காரைக்கால் ஆட்சியர் மரியாதை

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அரசு சார்பில் காலை அனுசரிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன்,  காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரன், மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், மக்கள் பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.