தஞ்சையில் அனைத்து தெருவோர வியாபார தொழிலாளர் சங்கம்  ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு ,வியாபார சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி தெருவோர வியாபார தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தஞ்சையில் உழைக்கும் மக்கள் தாங்கள் வசிக்கின்ற இடங்களில் காய்கறிகள், மளிகை, உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தெரு ஓரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தெருவோர வியாபார தொழிலாளர் சட்டத்தை முழுமையாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இதனையடுத்து தெருவோரத்தில் வியாபாரம் செய்து வரும் அனைவரையும் விடுபடாமல் கணக்கெடுத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும், வியாபாரத்திற்கு அத்தாட்சியாக வியாபாரச் சான்று வழங்க வேண்டும், தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமித்து அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும், தெரு வியாபார சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வாடகையாக ஆண்டு கட்டணத்தை சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், வங்கிகளில் நிர்ப்பந்தம் இல்லாது கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெருவியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார், சங்க மாநிலத் தலைவர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, சங்க மாவட்ட குழு உறுப்பினர் கல்யாணி, உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள் முடிவில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்தார் இதே போல கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.