தஞ்சாவூர் அருகே அரசூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம்

தஞ்சாவூர் அருகே உள்ள மணக்கரம்பை ஊராட்சியை சேர்ந்த அரசூர் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கால்நடை மருத்து முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மணக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமா சதீஸ்குமார் தலைமை தாங்கினார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாவட்ட மேலாளர் இரா.அன்பழகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் அம்மன்பேட்டை கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வி.லாவண்யா கால்நடை மருத்துவ முகாமை துவங்கி வைத்தார்.

இம் முகாமில் ,திருப்பழனம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கே பாலமுருகன் , மேல திருப்பந்துருத்தி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் எம் ப்ரீத்தி மற்றும் பூதலூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் மீ கமலநாதன்ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் கால்நடைகளுக்கான சினைப் பரிசோதனை  கணினி ஸ்கேனர் மூலம் செய்யப்பட்டு. சினைப் பருவம் வராத மாடுகளுக்கு சிறப்பு மருத்துவமும், பருவத்தில் இருந்த மாடுகளுக்கு சினை ஊசிகளும் செலுத்தப்பட்டது. மேலும் இவ்வகாமில் குடல் புழு நீக்க மருந்துகள், சத்து இணை உணவுகள், கால்நடைகளின் காயங்களுக்கு மருந்துகள் போன்றவை வழங்கப்பட்டன. 

கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செல்வமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கால்நடை முகாமிற்கு கொண்டு வந்து சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர், முகாமின் நிறைவில் அம்மன்பேட்டை கால்நடை ஆய்வாளர் மா.மஞ்சுளா நன்றி கூறினார். 

முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துறை, ரிலையன்ஸ் அறக்கட்டளை, மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.