தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை 

இந்தி எதிர்ப்பை கண்டித்து மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது இன்னுயிரினை இழந்தனர்,இவர்களுக்கு ஆண்டுதோறும் திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது, இதனையடுத்து தஞ்சாவூரில் திமுக சார்பில் எம்பி பழநிமாணிக்கம் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகரன் மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம்பூபதி மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, பகுதி செயலாளர்  மேத்தா கவுன்சிலர் தமிழ்வாணன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட  திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதைப்போல் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தஞ்சை ரயிலடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதில் நிர்வாகிகள் அறிவுடை நம்பி, சாமிநாதன், கவுன்சிலர் மணிகண்டன், தவமணி (காவல் ஓய்வு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்