“ஞானக் கண் படைத்தவர்கள் நீங்கள் ” என்று அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு உடைகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஸ்துதாஸ் காந்தி பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களை இப்படிக் குறிப்பிட்டார்.
புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் ஆப்பாடி பழனியப்பன் வள்ளியம்மை அறக்கட்டளை சார்பில் 38 மாணவர்களுக்கு உடைகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலளார் கிருஸ்துதாஸ் காந்தி மற்றும் அவரது துணைவியார் மேனாள் கூடுதல் தலைமைச்செயலாளர் குத்ஷியா காந்தி இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். உடைகளை வழங்கிப் பேசிய கிருஸ்துதாஸ் காந்தி” நீங்கள் எல்லோரும் ஞானக்கண் படைத்தவர்கள். உங்களுக்கு எங்களுக்கு இருப்பது போன்று பார்வையில்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லோரும் அறிவிலும் ஆற்றலிலும் எங்களை விட சிறந்தவர்கள்.எங்களால் கண்ணை மூடிக்கொண்டு கொஞ்ச தூரம் கூட தடுமாறாமல் நடக்க முடியாது.

ஆனால் உங்களால் முடியும். உங்களில் சிலர் ஐ.ஏ.எஸ்.ஆகவும், ஐ.எப்.எஸ் ஆகவும் உருவாகியிருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ளுங் கள்.நீங்களும் அவ்வாறு ஆக வேண்டும்” என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும் அங்கே சிறப்பாகப்பாடிய குழந்தைகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். இந்நிகழ்வில், கிருஸ்துதாஸ் காந்தியின் மகள் அருள்மலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்,ஆப்பாடி பழனியப்பன் வள்ளியம்மை அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் ஸ்டேட் பேங்க் துணை பொதுமேலாளர் சிவலிங்கம், அறங்காவலர்கள் மருத்துவர் அருண் சதீஷ், மருத்துவர் நிவேந்தினி, மேனாள் வன அதிகாரி ராதாகிருஷ்ணன் , பேரா.திருஞானமூர்த்தி,பேரா.விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். மேலும் இவ்வறக்கட்டளையின் சார்பில் 20 ஆதரவற்ற பெண்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டது.

