ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டம் மன்றத்தில் நடைபெற்ற, ஒன்றிய குழு கூட்டத்திற்கு, சேர்மன் நா. ரவிசங்கர் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம், அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள முருகானந்தத்திற்கு, சேர்மன் ரவிசங்கர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார், இளநிலை உதவியாளர் சந்திர வடிவு தீர்மானங்களை படித்தார்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, 2022-2023 ஆம் ஆண்டு, 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி  முதல் ஒதுக்கீடாக வரப் பெற்றுள்ள, 69 லட்சத்து 94 ஆயிரத்து 545 ரூபாய்க்கு, ஜெயங்கொண்டம் ஒன்றியம் முழுவதும் உள்ள, ஒன்றிய கவுன்சிலர்கள் வாரியாக, வளர்ச்சி பணிகளை தேர்வு செய்வது உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்த, அரசின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர், ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டத்தை பார்வையிட்டனர், இக்கூட்டத்தில் அலுவலக மேலாளர் கஸ்தூரி, அக்கவுண்டன்ட் தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜன், ராஜசேகர், சம்பத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.