ஜி.வி பிரகாஷ் – அபர்ணதி நடிப்பில் வரும் ’ஜெயில்’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஜி.வி பிரகாஷ் – அபர்ணதி நடிப்பில் வரும் ‘ஜெயில்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ்-க்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இப்படத்தின் உரிமையை சமீபத்தில்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

ஜெயில் படத்தில் இடம்பெற்ற ’காத்தோடு காத்தானன்’ பாடல் மெகா ஹிட் அடித்து இன்றளவும் பலரது மனம் கவர்ந்த பாடலாக உள்ளது. சமீபத்தின், படத்தின் இரண்டாவது பாடலான ‘நகரோடி நகரோடி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் டிசம்பர்  9 ஆம் தேதி தியேட்டர்களில் ‘ஜெயில்’ வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 59 = 60