சென்னையில் அதிரடி காட்டும் போலீஸ் உதவி கமிஷனர் அரிகுமார்- தெறித்து ஓடும் குற்றவாளிகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா, புகையிலை, ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்களை பதுக்கி வைப்பவர்கள் மீதும் விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொண்டும், போதை பொருட்களை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் சென்னை  வேப்பேரி பகுதி காவல் உதவி ஆணையர் அரிகுமார் கஞ்சா போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதில் அவர் ஒரே வாரத்தில் கஞ்சா விற்பனை செய்த 14 வழக்குகளை கையில் எடுத்து தீவிர புலன் விசாரணை செய்து அவர்கள் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து உள்ளார். 

இதைப்போல வேப்பேரி காவல் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஹூக்கா பார் நடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் வேப்பேரி உதவி காவல் ஆணையர் அரிகுமார் தனிப்படை போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து மனிஷ் ஜோஷி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ஐந்து ஜாடி, பத்து பைப் மற்றும் சுமார் 2 கிலோ ஹூக்கா பிளேவர் ஆகியவற்றை கைப்பற்றினர்.

அரிக்குமாரின் இந்த துரித நடவடிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா,  மற்றும் இணை ஆணையர் நாயர் ஆகியோர் பாராட்டினார்கள். கீழ்ப்பாக்கம் காவல் சரக துணை ஆணையர் கோபி, அரிகுமாரை பாராட்டி பணம் வெகுமதி வழங்கினார்.

உதவி கமிஷனர் அரிக்குமார் எப்போதும் பரபரப்பாகவே பணி செய்பவர். இவர் பணிபுரிந்த கே.கே.நகர் பகுதிகளில் மூன்றாவது கண் என்று சொல்லப்படும் சிசிடிவி கேமராக்களை அந்த பகுதி முழுவதும் பொருத்தி செயின் பறிப்பு கொள்ளையர்களும் ரவுடிகளும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுத்தார். அதேபோல எம்.கே.பி நகர் பகுதியில் பணிபுரியும் போது அந்த பகுதியில் இதேபோல போதைப் பொருள்கள் கடத்தப்பட்ட தகவல் அறிந்து ஹான்ஸ், பான்பராக், கஞ்சா போன்ற போதை பொருட்களையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தார்.

 மேலும் ஒரு கொலை குற்றம் நடப்பதற்கு முன்பே குற்றவாளிகளை கண்டுபிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இவர் மற்றொரு முகமாக இல்லாத வர்களுக்கும் உதவி செய்வதில் வல்லவர் ஆவார்.

பள்ளிக்கூட படிப்பிற்கு பண உதவி, அனாதை ஆசிரமங்களுக்கு உணவுகள் என இப்படி பல வழிகளில், பல உதவிகளையும் செய்து வருகிறார். அரிகுமார் என்ற பெயரை கேட்கும் போதே ரவுடிகளுக்கும், போதை பொருள் கடத்தல் காரர்களுக்கும் ஒருவித அச்சம் உடனடியாக ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிய சேர்ந்தாலும் அந்த பகுதியில் ஏற்கனவே அடிதடி, மாமுல் வேட்டை, கொலை, திருட்டு என இப்படி பல குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் அந்தப் பகுதியை விட்டு தானாகவே சென்று விடுவார்கள்.  இதற்கு காரணம் இவரின்  அதிரடி நடவடிக்கையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த போதை இல்லா தமிழகம் திட்டம் அரிக்குமார் போல இன்னும் பல காவல் அதிகாரிகள் செயல்பட்டால் முதல்வரின் இந்த  கனவு விரைவில் நிறைவேறக்கூடிய நாள் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல  அதிக முறை மாநகர போலீஸ் கமிஷனரிடம் விருதுகளும்  ரிவார்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.