சங்கராபுரம் அருகே விவசாயின் வீட்டில்  114 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 1.5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை –  போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை  கிராமத்தில் வசிக்கும் விவசாயி சின்ராஜ் என்பவர் கடந்த 28-ம் தேதி சென்னையில் உள்ள தமது மகன்களை பார்க்க சென்று, பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊரான சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்பொழுது வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது, உடனே  உள்ளே சென்று பார்த்த போது, அறைகளிலிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன இந்நிலையில் பீரோவில் இருந்த 114 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இச்சம்பவம் குறித்து உடனடியாக வடப்பொன்பரப்பி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார், இத்தகவலறிந்த காவல்துறையினர், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து கொள்ளை கும்பல் யார் என்பது குறித்து  சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர், விவசாயின் வீட்டில் 114 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் இப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.