காரைக்குடி மூ.மெ.சேவு பங்காளிகளுக்கு பாத்தியமான கோட்டையூர் – வேலங்குடி அருள்தரு ஸ்ரீமெய்ய விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோட்டையூர் – வேலங்குடி சின்னப்ப ஊரணி வடகரையில் அமைந்திருக்கும் காரைக்குடி மூ.மெ.சேவு பங்காளிகளுக்கு பாத்தியமான ஸ்ரீ மெய்ய விநாயகர் திருக்கோவில் திருக்குடா நன்னீராட்டு விழா நாளை காலை 7.56 மணிக்கு மேல் 9.48 மணிக்குள் கும்ப லக்னத்தில் விநாயகர், வேல் மற்றும் விமான கலசங்களுக்கு நன்னீராட்டு விழா அதி விமர்சையாக நடைபெற உள்ளது.

திருக்குடா நன்னீராட்டு விழாவை முன்னிட்டு காலை 11:30 மணியளவில் அரு.மெ.மெ.மெ. இராமநாதன் செட்டியார் குடும்பத்தார்களால் நடத்தப்படும் அறுசுவை அன்னதானமும், மாலை ஆறு மணிக்கு ஆசிரியர் சேவு.மெ.பழ. முத்துக்குமார் சார்பில் சிவகங்கை மாவட்ட கவனகக் கலை மன்றம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும். பத்து மணி அளவில் சிங்கப்பூர் மீனாட்சி முத்தையா குடும்பத்தார் நடத்தும் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மூ.மெ.சேவு பங்காளிகளும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.



