கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளில் பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரளா எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும். 9 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளிலும் ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகளில் பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 44% முதல் தவணை தடுப்பூசியும், 15% இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் கேட்டு ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன்.வருகிற 12ம் தேதி 20 லட்சம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதன்படி, சென்னை, திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை 10,000 முகாம்கள் நடத்தி 20 லட்சம் தடுப்பூசி போடப்படும், என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்,தெரிவித்துள்ளார்.