
கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் ஆரா கலாச்சார விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். தாளாளர் கனகராஜன், நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரியின் முதல்வர், தன்னம்பிக்கை பேச்சாளர் சரவண. திலகவதி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக நடைபெற்ற பரதநாட்டியத்தில் மாணவிகள் சுபதர்ஷினி, பிரியதர்ஷினி, ஒளிப்பதிவு சமர்ப்பித்தல் போட்டியில் ஆர்னவ் மீனா, பிரியதர்ஷினி, ராகவி ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். அது போல நாட்டுப்புற குழு நடனம், மௌன நாடகம், தமிழ் நாடகம், மேற்கத்திய நடனம் போன்றவைகள் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த சுழற்கேடயத்திற்கு முதலாம் ஆண்டு மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள் பத்மா ராணி, சுகப்பிரியா, யோகேஸ்வரி, பிரியா, சாரதா ஒருங்கிணைப்பாளர்கள் அழகுமதி, நித்ய பூரணி, சத்யா, ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.