கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறவியல் மகளிர் கல்லூரியில் கிரவுன் சிட்டி ரோட்டரி சார்பில் ஆடைகள் வழங்கும் விழா

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பெண் பணியாளர்களுக்கு புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சார்பில் ஆடைகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, விழாவிற்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார், ரோட்டரி துணை ஆளுநர் ஆர்.முருகராஜ், பொறியியல் கல்லூரியின் தாளாளர் ந.கனகராஜன், நிர்வாக அறங்காவலர் அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.செந்தில் கணேசன் கலந்து கொண்டு 32 பெண் பணியாளர்களுக்கு ஆடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் முதல்வர் செ.கவிதா, இயக்குநர் மா.குமுதா கிரவுன் சிட்டி ரோட்டரியின் செயலாளர் ஆர்.எம்.தங்கத்துரை, பொருளாளர் பி.எல்.செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.அக்பர், அறந்தாங்கி ரோட்ராக்ட் சங்கத்தின் ஆலோசகர் கோபாலகிருஷ்ணன். கல்லூரியின் ரோட்ராக்ட் தலைவர் எம்.விமிகா, செயலாளர் எம்.தனலெட்சுமி, பொருளாளர் எஸ்.விக்னேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.