கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்
கேரளாவில் இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த நான்கு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் 24 மணிநேரத்தில் 204.5 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதேபோன்று, கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது. இதனால் மலைப்பிரதேச பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் நிலச்சரிவு, மண்சரிவு போன்றவை ஏற்பட கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள மாநில பேரிடர் மேலாண் கழகம் மக்களை அறிவுறுத்தி உள்ளது.