கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 2022-23ம் கல்வி ஆண்டு துவக்க விழா

கந்தர்வக்கோட்டை அருகே கிங்ஸ் பொறியியல் கல்லூரி புனல் குளத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.

விழாவில், கல்லூரி முதல்வர் அற்புத விஜய செல்வி வரவேற்றார். கல்லூரியின் வரலாற்றையும் சிறப்பம்சங்களையும் அவர் எடுத்துரைத்தார் கல்லூரி செயலர் ராஜேந்திரன் துவக்கவுரையாற்றி, மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய பல்வேறு தத்துவ மேதைகள் மற்றும் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டாக கூறினார்.

விழாவில் கல்லூரி துணை முதல்வர் சிவக்குமார் கல்லூரியில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி பற்றி பேசினார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. கல்லூரி முதலாம் ஆண்டு துறைத்தலைவர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.