கவிராசன் அறக்கட்டளை நடத்திய “நட்சத்திர ஆசிரியர்” விருதுகள் வழங்கும் விழா

கவிராசன் அறக்கட்டளை நடத்திய “நட்சத்திர ஆசிரியர்” விருதுகள் வழங்கும் விழா மற்றும் “புதுமைப் புதையல்” நூல் வெளியீட்டு விழா, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அரங்கத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற தேசிய நல்லாசிரியர் விருதாளர், தங்கம் மூர்த்தி, சிறந்த ஆசிரியர்களுக்கு, “நட்சத்திர ஆசிரியர்”  விருதுகளை வழங்கி, “புதுமைப் புதையல்” நூலை வெளிட்டு, தொடக்க உரை ஆற்றினார்.

இணையம் மூலம், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் வள்ளிநாயகம், கவிராசன் அறக்கட்டளையைப் பாராட்டி, ஆசிரியர்களின் பெருமை போற்றி, வெளியிட்ட நூலில் இருந்து கருத்துகளை எடுத்துச் சொல்லி, விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி, சிறப்புரை ஆற்றினார்.

விழாவில், புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் வி.ராஜேஷ் சீனிவாஸ், போரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க.சு.செல்வராஜ், தூய மரியன்னை மேனிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியை வி.ஜோசபின் மாலதி, காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சே.கீதா மற்றும் மரிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தீ.திருப்பதி ஆகிய ஐவருக்கு, “நட்சத்திர ஆசிரியர்” விருதுகள் வழங்கப்பெற்றன.

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி, தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியை க.புவனேஸ்வரி எழுதிய “புதுமைப் புதையல்” நூல் வெளியிடப்பெற்றது. விருதாளர்களையும், நூல் ஆசிரியரையும், கவிராசன் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் முருகபாரதி அறிமுகம் செய்தார். விழா ஏற்பாடுகளை, கவிராசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் க.சண்முகநாதன் மற்றும் கவிராசன் இலக்கியக் கழக துணைச்செயலாளர் மு.ச.பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.