கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக விஜயலட்சுமி பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக விஜயலட்சுமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை  ஆகஸ்ட் 12ம் தேதி அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த முனுசாமி வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த டி.விஜயலட்சுமி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் மாறுதல் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக டி.விஜயலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், இயக்குனர், மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய  மாவட்ட  கல்வி அலுவலர்களும் மற்றும் தலைமை ஆசிரியர்களும் வாழ்த்துக்கள் கூறினர்.