கறம்பக்குடி அருகே ஆட்டோ மீது டூவிலா் மோதி விபத்து ஒருவா் பலி

கறம்பக்குடி அருகே லோடுஆட்டோ மீது டூவிலா் மோதி விபத்து ஒருவா் பலி

கறம்பக்குடி அருகே  மருதன்கோன் விடுதியில்  இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் டாட்டா ஏஸ் வாகனத்தை முந்த முயன்ற போது லோடு ஆட்டோ வாகனத்தில் மோதி ஒருவா்  பரிதாபமாக உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சேவுகன் தெரு பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி மகன் மகேந்திரன் இவர் தனது டூவீலாில்  கல்லாகோட்டைக்கு சென்று லோடு ஆட்டோ  வாகனத்தில் சிமெண்ட் கற்களை ஏற்றிவிட்டு அதன் பின்னால் டூவீலாில்  சென்று கொண்டிருந்தார். மருதன் கோன் விடுதி அருகே லோடுஆட்டோ  வாகனத்தை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக லோடுஆட்டோ வாகனத்தில் மோதி பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் உடனே அவரை மீட்டு ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் மகேந்திரன் வழியில் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் லோடுஆட்டோ டிரைவரான கறம்பக்குடி கருப்பக்கோன் தெரு ரெத்தினம் மகன் ரகுநாதன் என்பவர் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.