கறம்பக்குடி அருகே அரசு  பள்ளியில் கதை சொல்லல் நிகழ்வு : டேனி பட இயக்குனர் சந்தானமூர்த்தி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதி அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது இப்பள்ளியில் கதை சொல்லல் நிகழ்வு டேனி பட இயக்குனர் சந்தானமூர்த்தி பங்கேற்று பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது, மாணவர்களிடையே கதை சொல்லும் பழக்கத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும் கதை கேட்டலின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும வகையில் கதை சொல்லல் நிகழ்வு ஒடப்பவிடுதி ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டேனி  திரைப்பட இயக்குனர் எல்.சி.சந்தானமூர்த்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு நாட்டார் கதைகள்வாழ்வியல் கதைகள் போன்ற பல்வேறு வகையான  கதைகளை கூறினார்பிறகு அந்தக் கதைகள் குறித்து மாணவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு விளக்கங்களை இயக்குனர் கூறினார்பின்னர் மாண வர்களும் தங்களுக்கு தெரிந்த கேட்ட கதைகளை கூறக்கேட்கப்பட்டது.மாணவர்கள் சொன்ன கதைகளில் சில கதைகள் பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி தற்போதைய மாணவர்களுக்கு கடத்தப்பட்டு வருவது நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது,மதிய நிகழ்வாக மாணவர்களை ஐந்து அணிகளாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் வாழ்வியல் சார்ந்த பெயர்களாலான பள்ளிக்கூடம்பொட்டுக்கடலைவிவசாயம்,காட்டாறு,நெல்வயல் என்பதாக  மாணவர்களாலேயே பெயரிடப்பட்டு அனைத்து வகுப்பு மாணவணர்களும் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறச் செய்யப்பட்டது.

நிகழ்வில் பேசிய இயக்குனர் கதை சொல்வதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்றும் மாணவர்களின் கற்பனை திறன்,படைப்பாற்றல் திறன்,ஆளுமை வளர்ச்சி,கேள்வி கேட்கும் திறன் மற்றும் ஒவ்வொரு கருத்துகளையும் புரிந்துகொண்டு உள்வாங்கும் திறன் எவ்வாறு பரிணாமம் அடைகிறது என்பதை எடுத்துக் கூறினார்இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரிய துரைசிங்கம்  தலைமை வகித்தார், சமூக ஆர்வலர் அன்பழகன் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்பள்ளியின் ஆசிரியர் அப்பு தொகுத்து வழங்க பள்ளியின் ஆசிரிய ர்கள்  சாமியப்பன்சிவரஞ்சனி,திவ்யாகில்பர்ட் ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =