கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி

கர்நாடகாவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் தார்வாட்டில் உள்ள தேகூர் கிராமம் அருகே நேற்று இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னதாக கார், லாரி இரண்டும் தார்வாட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கார் டிரைவர் பாதசாரி ஒருவர் மீது மோதாமல் தவிர்க்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பாதசாரியும் உயிரிழந்தார்.

மேலும் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேரில் இருவர் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் தார்வாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.