கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது – பாரத் சேனா அமைப்பினர் கோரிக்கை

கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என்று கோவை பாரத் சேனா அமைப்பின் சார்பில் உள்துறை அமைச்சர் உள்பட உயர்மட்ட அதிகாரிகளுக்கு தபால் மூலமாக கோரிக்கை மனு அனுப்பி  வைக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் இருந்து கோவை பாரத் சேனா அமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை மனுவில் எக்காரணம் கொண்டும் கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் தீவக்ஷ பயங்கரவாத இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை  மத்திய உள்துறை அமைச்சர் உள்பட உயர் மட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. இந்த தபால் அனுப்புதல் நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்  ரவிக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ருத்ரம் முத்து, மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர். குமரேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.