கருணாநிதியின் கனவு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மறைந்த முன்னான் திமுக தலைவர் கருணாநிதியின் கனவு திட்டங்களை படிபடியாக செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைவராகவும் முதலமைச்சராகவும் கருணாநிதி நம்மை முன்னால் நின்று இயக்கிக் கொண்டிருப்பதாகவும், அவரின் சிந்தனையை நிறைவேற்றுவதே சிறந்த அஞ்சலி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றாண்டு காணப்போகும் அவரது புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க  வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.