
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஐந்தாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு மாவட்ட முழுவதும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையான தலைப்புகளில் புத்தகங்களை வாசித்தனர். மாணவிகள் ஒரு மணி நேரம் இந்த வாசிப்பு நிகழ்வில் அறிவியல் அறிஞர்கள், சிறுகதைகள், சமூகவியல், உலகத் தலைவர்கள் காந்தி,நேரு, தாகூர், அம்பேத்கார், காமராஜர், இந்திரா காந்தி, அண்ணா, திராவிட இயக்க வரலாறு, அப்துல் கலாம், ஸ்டாலின், லெனின் உள்ளிட்ட தலைவர்களின் நூல்களை வாசித்தனர்.
வாசிப்பு பழக்கம் என்பது பாடப் புத்தகத்தை தாண்டிய அறிவாற்றலை வளர்க்கும் விதமாக இருந்து வருகிறது. புத்தகத் திருவிழாவை மாணவர்கள் அறிவு தேர்வுக்கு பயன்படுத்த வேண்டும் என அறவுரை வழங்கப்பட்டது. மாணவர்கள் இதுகுறித்து பேசியதாவது, பாட புத்தகங்களை தாண்டி பொது அறிவுகளை வளர்த்துக் கொள்ளவும் அறிஞர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், புத்தகங்களை வாசித்தல் இன்றியமையாத்து என்று கூறினர்.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஷப்னம் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட இணைச்செயலாளர் கு.துரையரசன், கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா, செயலாளர் ம.சின்னராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் குமார், பாரதிதாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர் சசிகுமார், பாரதிராஜா, ராஜலெட்சுமி, சண்முகதேவி, ஜெயகுமார், சகீனா ஆகியோர் செய்தனர்.