கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பெரியார் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டார வளமைய முன்னாள் மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ் தலைமை வகித்தார். கந்தரவக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ. ரகமதுல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்தார். 

இல்லம் தேடி கல்வி மைய முன்னாள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் இ. தங்கராசு வரவேற்றார். தலைமை ஆசிரியர் கள் கிருஷ்ண வேனி, வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை  ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா பெரியார் வாழ்கை வரலாற்று குறித்து பேசியதாவது, பெரியார் பிறந்த நாள் ஆண்டு தோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது .

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி  செப்டம்பர் 17, 1879 பிறந்தார். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்.  சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். வைக்கம் போராட்டம் கேரளத்தில் வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டோர் நடக்க  இறுதியில் வெற்றி பெற்று ‘வைக்கம் வீரர்‘ என்று புகழப்பட்டார்.

பகுத்தறிவு‘ வார ஏட்டைத் துவக்கினார். பகுத்தறிவு தினசரி இதழை சில காலம் நடத்தினார். பகுத்தறிவு வார ஏட்டில் முதன் முதலாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் புகுத்தினார். என்று பேசினார்.  நிறைவாக சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பாசிரியர் அறிவழகன், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.