புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புனல் குளம் கிராமத்தில் அமைந்துள்ள
குழந்தை முனியாண்டவர்செல்வ விநாயகர் செல்லியம்மன் மதுரை வீரன் காளியம்மன் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கடந்த 3 நாட்களாக புண்ணிய நதிகளால் ஆன காவேரி ராமேஸ்வரம் உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜை செய்து புனித நீரை சிவாச்சாரியார்கள் மேள தாலங்களுடன், தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு குடமுழுக்கு செய்வதற்கு முன்பாக கருட பகவான் வானில் வட்டமிட பக்தர்கள் அரோகரா என்று கோஷம் எழுப்ப குடமுழக்கு விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது
நிகழ்ச்சி ஏற்பாட்டை புனல்குளம்கிராம மக்கள்ஏற்பாடு செய்திருந்தனர், கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர், அதனைத் தொடர்ந்து அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது.