கந்தர்வகோட்டையில் கூட்டுறவு சங்க நிர்வாக குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சாதாரண நிர்வாக குழு கூட்டம் சங்கத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. சங்க கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் சங்க செயலாளர் அழகர்முத்து (பொ)  வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாய பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கடன் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டுறவு சங்க செயலாளர் ( பொறுப்பு)  அழகர்முத்துவிற்கு சங்க தலைவர் செல்லத்துரை சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். கூட்டத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர்கள் புதுநகர் முத்து, பிசானத்தூர் மாரிமுத்து, துருசுப்பட்டி கவிதா, அக்கச்சிப்பட்டி கருப்பையன், கந்தர்வகோட்டை கவிதா, பொண்ணுச்சாமி, தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொன்டனர். சங்க துணை தலைவர் ஜானகி ராஜேந்திரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 2 =